வாலாஜாபாத் பேரூராட்சி தலைவராக திமுகவின் இல்லாமல்லி அறிவிப்பு

வாலாஜாபாத் பேரூராட்சி தலைவராக திமுகவின் இல்லாமல்லி அறிவிப்பு
X

வாலாஜாபாத் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட இல்லாமல்லி.

வாலாஜாபாத் பேரூராட்சி தலைவராக திமுகவின் இல்லாமல்லி அறிவிக்கப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 10 திமுக உறுப்பினர்கள், 5 அதிமுக உறுப்பினர்களும் வெற்றி பெற்று, நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றனர்.

நாளை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக பேரூராட்சி தலைவர் வேட்பாளராக, இல்லாமல்லி அவர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில் திமுக அதிக பெரும்பான்மை உள்ளதால், இவர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

Tags

Next Story
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!