வாலாஜாபாத் : இடி தாக்கி பள்ளி மாணவன் பலி‌

வாலாஜாபாத் : இடி தாக்கி பள்ளி மாணவன் பலி‌
X

பைல் படம்.

வாலாஜாபாத் அடுத்த கோயம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவன் கமலேஷ் ஆடு மேய்க சென்ற போது இடிதாங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாலாஜாபாத் அடுத்த கோயம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகன் கமலேஷ் (15) நாய்க்கன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆடு மேய்ப்பதற்காக கிராமத்தின் அருகாமையில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு மதியம் சென்று உள்ளார்.

அப்பொழுது இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது இதனையடுத்து ஆடு மேய்க்கச் சென்ற கமலேஷ் இன்னும் வீடு திரும்பவில்லை என அவர் குடும்பத்தினர் தேடி சென்ற பொழுது திறந்தவெளியில் சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வாலாஜபாத் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் இடி தாக்கி இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு