தார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு !

தார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு !
X

உத்திரமேரூர் அருகே தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை கிராமத்திற்குள் பரவுவதால் கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது மட்டும் இல்லாமல் விளை நிலங்களும் சேதம் அடைவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சிறுமைலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமைலூர், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றார். சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் கலக்கும் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு தார் கலக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த தொழிற்சாலையில் இருந்து நச்சுத்தன்மை அடங்கிய புகை வெளியேறி இரு கிராமத்திற்குள் பரவுவதால் கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையானது விவசாயிகள் பயிரிட்டு உள்ள விளை நிலங்களில் படர்வதால் விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ள கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக தொடங்கியுள்ள தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை சுவாச பிரச்சனைகளை உருவாக்குகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் இயங்கி வரும் தார் கலக்கும் தொழிற்சாலை மற்றும் கல்குவாரி, கல்அரவை தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!