உத்திரமேரூர்: 11 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் -வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு
தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் செப்டம்பர்க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது அதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆயத்த பணிகளை மாநில அரசும் தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளை நிர்வகிக்கும் ஊராட்சி செயலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்படுவது வழக்கம்.
அவ்வகையில் கடல்மங்கலம், காட்டாங்குளம், வயலக்காவூர், திணையாம்பூண்டி, களியப்பேட்டை, சாத்தனஞ்சேரி, இளநகர், ராவுத்தநல்லுார், களியாம்பூண்டி, அனுமந்தண்டலம், காரியமங்கலம், ஆகிய 11 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu