பதவியேற்புக்கு தயாராகும் கிராம ஊராட்சி அலுவலகங்கள்: பணிகள் தீவிரம்

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பதை ஒட்டி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் புதிய வண்ணங்கள் தீட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த 12ஆம் தேதி 5 ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தேர்வான உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய அலுவலகங்களிலும், மாவட்ட ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில் 269 கிராம ஊராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளதையொட்டி கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு புதிய வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!