உத்திரமேரூர்: ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

உத்திரமேரூர்: ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X
காவனுார்புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பழனி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. கடந்த இரு தினங்களாக மழையின்றி காணப்பட்ட நிலையில், உத்திரமேரூர் அடுத்த காவனுார்புதுச்சேரியை சேர்ந்தவர் பழனி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

மழை நின்ற நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு மட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் கம்பத்தில் ஏறிய பழனி, மின் இணைப்பை சரிசெய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்த பழனி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி