உத்திரமேரூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 85% வாக்குப்பதிவு

உத்திரமேரூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 85% வாக்குப்பதிவு
X

உத்திரமேரூர் நுழைவு பகுதி

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 89, 013 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத் தேர்தலுக்காக ஒன்றியம் முழுவதும் 73 கிராம ஊராட்சிகளில் 252 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப் பட்டது.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51,136 ஆண் வாக்காளர்களும், 53,376 பெண் வாக்காளர்களும் , 7 இதர வாக்காளர்களும் என 1,00,819 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. .மாலை ஆறு மணி வாக்குபதிவு நிறைவுற்ற பின் 44,462 ஆண் வாக்களர்களும் , 44,549 பெண் வாக்களர்களும் , 2 இதர வாக்காளர் என 89,013 வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 87%, பெண் வாக்காளர்கள் 83 சதவீதமும், இதர 29 சதவீதமும் என சராசரியாக 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil