கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம். ஆடிமாத சிறப்புப் பெயர் பெற்ற அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. கடந்த வாரம் ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று இவ்வாலயத்தில் நேத்திக்கடன் மற்றும் ஆடி மாத சிறப்பு பூஜை செய்ய ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறையால் பொதுமக்களை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க கூறினர், ஆனால் பொதுமக்கள் அலட்சியமாகவே செயல்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளவர உள்ளதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஆட்சியர் வருகை புரிந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இவ்வாலயம் பின்பற்றாதது கண்ட ஆட்சியர் ஆலயம் திறக்க அனுமதி மறுத்தார். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் ஆடு கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட தடை செய்து உத்தரவிட்டார். உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu