82 ஆண்டுகளுக்கு பிறகு 3 ம் தேதி தேரோட்ட நிகழ்வு: பக்தர்கள் மகிழ்ச்சி

உத்தரமேரூர் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில் முகப்பு
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளது.அவ்வகையில் உத்தரமேரூர் அடுத்த சீட்டணஞ்சேரி கிராமத்தில் பாலாற்றங்கரையில் தென்புறத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில்.
1200 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஐந்து நிலை ராஜகோபுரம், 3 நிலைகள் கொண்ட கோபுரம் என இரு கோபுரங்கள் அமைந்துள்ளது.திருக்கோயில் உள்ளே ஒரு ஏக்கர் பரப்பளவில் திருக்குளம் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது.பசு பூஜை செய்ததால் காளீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளது. மேலும் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர் ஆட்சிகாலத்தில் பூஜை செய்ததால் இப்பகுதி அக்காலத்தில் கிருஷ்ணபுரி என அழைக்கப்பட்டுள்ளது
இத்திருக்கோயில் காளீஸ்வரர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு என தனித்தனியாக இரு கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளதும் , இரு பிரமோற்சவம் நடைபெறுவது வேறு எங்கும் காணமுடியாத அதிசயமாக பார்க்கப்படுகிறது. அக்காலத்தில் சீத்தண்ணன், சாத்தன்ணன், குறும்பன்னண் என 3 மன்னர்கள் இப்பகுதியை ஆண்டு ஈசனை வழிபட்டதால் அவர்கள் பெயரிலேயே இப்போதும் சீத்தனஞ்சேரி, சாத்தன்சேரி , குருமன்ஞ்சேரி என கிராம பெயராக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் இத்திருக்கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலைத்துறை உதவியை அக்கிராம மக்கள் நாடி ரூபாய் 60 லட்சத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.இது மட்டும் இல்லாமல் கடந்த 1940 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் தேரோட்டம் நடைபெற்ற பிறகு இதுவரை தேரோட்டம் நடைபெறவில்லை என்பதால் தற்போதைய குடமுழுக்கு நிகழ்ச்சியின்போது தேரோட்டம் நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு முப்பத்தி ஏழு அடி உயரமுள்ள திருத்தேர் நன்கொடை வசூல் மற்றும் தனி நபர் ஒருவர் நன்கொடை உதவியுடன் ரூ60 லட்சம் மதிப்பில் திருத்தேர் பணியும் நிறைவு பெற்றுள்ளது.
குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 3ஆம் தேதியும் , அன்றே திருத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றியுள்ள பக்தர்களும் 82 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சியை காண ஆவலுடன் உள்ளனர்.திருத்தேர் நிகழ்ச்சிக்காக கிராம மாட வீதிகளில் சுத்தம் செய்தல் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி சித்திரை பெருவிழா பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu