உத்திரமேரூர் அதிமுக வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு

உத்திரமேரூர் அதிமுக வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு
X
உத்திரமேரூர் சட்டமன்ற தொ-குதி அதிமுக வேட்பார் சோமசுந்தரத்திற்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தங்கள் கூட்டணிக் கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என பல வண்ண மெகா சைஸ் கோலங்கள், ஆளுயர மாலை, ஆரத்திகள் எடுத்து, பட்டாசு வெடித்து என பல வகைகளில் சிறப்பான வரவேற்பு வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு அளித்து வருகின்றனர்.

இதனால் உற்சாகம் அடைந்த வேட்பாளர் கிராமங்களின் அனைத்து வீதிகளின் வழியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க கோரி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!