உத்தரமேரூர் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

உத்தரமேரூர் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
X

உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து காமாட்சி என்பவர் நிர்வாக பணி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரமேரூர் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்த திருமதி காமாட்சி நிர்வாக பணி காரணமாக தனி வட்டாட்சியர், நில எடுப்பு சென்னை-பெங்களூர் விரைவு சாலை திட்டம் (அலகு2) காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பதிலாக வட்டாட்சியர் பயிற்சி பெற்று நீதியியல் பயிற்சி முடிந்த திரு ஜே குணசேகரன் என்பவர் உத்தரமேரூர் வட்டாட்சியர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இது வழக்கமான நிர்வாகப் பணி மாற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்