உத்திரமேரூரில் வழிப்பறி , கொள்ளையர்கள் 2 பேர் கைது, 3 பேரை தேடுது போலீஸ்

உத்திரமேரூரில் வழிப்பறி , கொள்ளையர்கள் 2 பேர் கைது, 3 பேரை தேடுது போலீஸ்
X

பைல் படம்

உத்திரமேரூர் அருகே சாலையில் செல்வோரிடம் வழிப்பறி செய்ய பதுங்கியிருந்த, ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று காலை மல்லியங்கரணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள தனியார் கம்பெனி அருகில் பதுங்கிருந்த 5 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதில், இருவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட இருவரும் ஏ.பி.சத்திரத்தை சேர்ந்த குட்டி (எ) அறிவழகன் மற்றும் அப்பு (எ) நவீன்ராஜ், என்பது தெரியவந்தது.

மேலும் தீவிர விசாரணையில் உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் வருவோரை மடக்கி மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய ஏ.பி., சத்திரத்தை சேர்ந்த ஹரி பிரகாஷ், சென்னை புளியந்தோப்பு வசி என்கிற வசீகரன், வந்தவாசியை சேர்ந்த ஜீவா (எ) அக்பர் ஆகிய 3 பேரையும் உத்திரமேரூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!