வாலாஜாபாத் அருகே 21 சவரன் தங்க நகைகள் திருட்டு

வாலாஜாபாத் அருகே  21 சவரன் தங்க நகைகள் திருட்டு
X

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் உள் பகுதி

வாலாஜாபாத் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்லிங்கபுரம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் மோகன்குமார்(49).

இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு 3 நாட்களுக்கு முன்பு வேலூர் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது மாமனார் மோகன்குமார் வீட்டுக்கு சம்பவ நாளன்று இரவு எதார்த்தமாக இவரைப் பார்க்க வந்த போது இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்து மோகன்குமாருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறை அங்கு சென்று திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடி நின்றது, கைரேகை நிபுணர்களும் தடயங்களையும்‌, வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த கேமரா‌காட்சிகளையும் சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், வெள்ளித்தட்டு,வெள்ளிக்குத்துவிளக்கு உட்பட முக்கால் கிலோ அளவிலான வெள்ளிச்சாமான்கள் ஆகியன திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!