தமிழகத்தில் தான் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகம்:- ஜி.கே.வாசன்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தினை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது தமிழகத்தில்தான் பெண்களுக்கான நல திட்டங்கள் அதிகம் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரத்தினை ஆதரித்து உத்திரமேரூர் பேருந்து நிலையம் எதிரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே. வாசன் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

அவர் தனது பரப்புரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழக மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழ செய்வதாகவும்,

குறிப்பாக இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண்களுக்கு அதிக அளவில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடும்பத்தில் உள்ள பெண்கள் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கில் அதிக அளவில் பெண்களை ஊக்குவிக்கிறது. அவர்களால் ஒரு குடும்பமும் , அதைத்தொடர்ந்து மாவட்டம் , மாநிலம் என அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணும் என்பதை கருத்தில் கொண்டு பெண் கல்வியை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் திமுக எதிர்கட்சி போல் செயல்படாமல் பொதுமக்களின் எதிரியாகவே செயல்பட்டது என்பதும் தெளிவான ஒன்று. எனவே பொதுமக்கள் அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!