பனை இலை பொக்கே வழங்கி விருந்தினர்களை அசத்திய கல்லூரி மாணவர்கள்

பனை இலை  பொக்கே வழங்கி விருந்தினர்களை அசத்திய கல்லூரி மாணவர்கள்
X

 மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொக்கேவுடன் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி.

பனை விதை நடும் விழாவிற்கு வந்த நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பனை ஓலை பொக்கே வழங்கி கல்லூரி மாணவர்கள் அசத்தினர்.

எண்ணம் அழகானால் செயல் அழகாகும் என பழமொழிக்கு ஏற்ப கல்லூரி மாணவர்கள் கற்பனை திறன் எப்போதும் உயர்ந்தது. எளிதில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாக்கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணிகள் குழு மற்றும் தனியார் இயற்கை ஆர்வலர் குழு இணைந்து அக்கிராம ஏரிக்கரையில் விதைகளை நடும் விழா நாடாளுமன்ற நடைபெற்றது.

இதில் உறுப்பினர் ஜி.செல்வம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தனர்.

இதற்காக வந்த இந்த இரு விருந்தினர்களை வரவேற்க தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கிராமத்திலுள்ள பனை மரங்களின் இலைகளை கொண்டும் , செம்பருத்திப் பூ மற்றும் சிலர் தாவரங்களைக் கொண்டு அழகிய பூக்களை சில நிமிடங்களில் உருவாக்கி விருந்தினர்களுக்கு பூங்கொத்தாக கொடுத்த நிகழ்வு அனைவரையும் மகிழ்வித்தது.

இதனைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் அதனை ரசித்து மாணவர்களின் கலை திறனை வெகுவாக பாராட்டினார்.

பல ஆயிரம் செலவு செய்து விருந்தினர்களை வரவேற்க முக்கிய நிகழ்வுகளில் வழங்கும் இதுபோன்று மாணவரின் கலைத் திறனை வளர்க்க அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் கல்வியோடு மட்டும் நிற்காமல் புதிய கற்பனைத் திறனைக் கொண்டு தங்களை உருவாக்கி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!