காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
X

 சிங்காடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி 

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளி சத்துணவு அமைப்பாளர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் 237 மாணவர்கள், 12 ஆசிரியர்கள் என மொத்தம், 249 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முழுவதும் தூய்மைபடுத்தபட்டது.

இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், பத்தாம் வகுப்பு மற்றும் +1 மாணவன் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தனிமையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு