உத்திரமேரூரில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: ஏராளமானாேர் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு மற்றும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 38 தனியார் நிறுவனங்கள் மற்றும் 10தொழில் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யவுள்ளது. இதில் காலை 9மணிமுதலே ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று தங்கள் சுய விவர குறிப்புகளை பதிவு செய்து நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
இதில் தேர்வாகும் நபர் குறைந்தபட்சம் ரூ 10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதில் கலந்துகொண்ட அனைவரும் நுழைவு வாயிலேயே உடல்வெப்பம், கிரிமிநாசினி மற்றும் முடக்கவும் வழங்கப்பட்டது. இதில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழில்மைய அலுவலர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் இளைஞர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் பேசிய அலுவலர்கள் அனைவரும், இளைஞர்கள் அரசு வேலை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் திறன் பயிற்சி களை மேற்கொண்டு வேலை அளிப்பவர்களாக உருவாக வேண்டும் எனவும், இதற்கான தனி பயிற்சிகள் அரசு மூலம் ஏற்பாடு செய்யபட்டது.
இதில் ஒரு மணி நேரத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வாகி மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குனர் ஆர்.அருணகிரி மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசராவ் ஆகியோர் இணைந்து பணிஆனை வழங்கினார்கள். இதில் ஓன்பது அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த தொழில் வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu