செய்யாற்றில் வறண்டு காணப்படும் மாகறல் தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை
மாகறல் அடுத்த செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மாகரல் அடுத்து அமைந்துள்ளது செய்யாறு. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் செய்யாறு, பெருநகர் வழியாக காஞ்சிபுரம்மாவட்டத்திற்குள் நுழைந்து அனுமந்தண்டலம், வெங்கச்சேரி வழியாக, திருமுக்கூடலில் பாலாற்றில் இணைகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லும் செய்யாற்றில், தடுப்பணை ஏதும் இல்லாத காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2017ல், செய்யான் யின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2019ல் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக இரு மாதங்களாக தொடர்ந்து செய்யாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் சென்று கொண்டிருந்தது. இதனால் தடுப்பணை தாண்டி உள்ள பகுதிகள் அனைத்தும் பெரும் சேதம் கண்டது.
மேலும் தடுப்பணை க்கு முன்பு மணல் பெருமளவிற்கு சேர்ந்து தடுப்பணை உயரத்திற்கு சேர்ந்ததால் அனைத்து நீரும் தேக்க முடியாமல் வெளியேறியது.
தற்போது இந்த தடுப்பணை வறண்ட பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. செய்யாற்றில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் நிலையில் இதில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலிரூந்து நீரால் கோடையில் தட்டுபாடின்றி சமாளிக்குமா என்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
உடனடியாக பொதுப்பணித்துறை தடுப்பணை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை பழுது நீக்கி தடுப்பணைக்கு முன்பாக மணல் திட்டுகளை அகற்றி நீர் சேமிக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் சேமிப்பு ஆதாரமாக தடுப்பணை விளங்க வேண்டும் . ஆனால் இந்த தடுப்பணை பாலைவனம் போல் துளி நீர் கூட சேமிப்பு இல்லாமல் இருப்பது பெரும் மனவருத்தத்தை விவசாயிகளிடையே ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu