பள்ளிகளில் கல்லூரி மாணவர்கள் சார்பில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு பயிற்சி

அரசு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு குட் மற்றும் பேட் செயல்கள் குறித்து விளக்கமளித்த சென்னை கல்லூரி மாணவர்கள்
பாலியல் தொல்லைகளை தவிர்த்தல் குறித்து நாடகம் மூலம் பள்ளி மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ, மாணவியர்கள்..
தமிழகத்தில் தற்போது பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பிரச்சனை நாள்தோறும் வெளியாகி வருகிறது.இது போன்ற நபர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல அரசு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் புளியம்பாக்கத்தில் உள்ள கண்ணபிரான் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ , மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடகமாக நடத்தினர்.சென்னை அடுத்த கிறிஸ்தவ கல்லூரி முதுகலை இதழியல் துறை சார்பில் நல்ல தொடுதல் good touchகெட்ட தொடுதல் Bad touch குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி மாணவ- மாணவிகளால் நடத்தப்பட்டது
சமூகத்தில் உள்ள சில கயவர்களால் பள்ளி மாணவ மாணவிகள் எவ்வாறு பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் என்ன என்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவணப்படம் , நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்பின்பு கல்லூரி மாணவர்கள் சார்பில் பள்ளிக்குத் தேவையான விளையாட்டு பொருட்களை பரிசாக கொடுத்தனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவ மாணவிகள் கூறும் போது, சிறிய வயதிலேயே நல்ல செயல்களை கற்றறிந்தால் வருங்காலத்தில் சிறந்த தோழமையுடன் பழகும் எண்ணம் ஏற்படும் என்பதை வலியுறுத்து வகையில் அரசு பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் மற்றும் ஒரு புதிய நிகழ்வுடன் பள்ளி மாணவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu