வாக்குப்பெட்டி அறைக்கு வேட்பாளர் முன்னிலையில் சீல் வைப்பு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் கட்சி பிரமுகர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள், தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு மையங்களில் நேற்று முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையமான சங்கரா கலை கல்லூரி வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு பூத் வாரியாக வைக்கப்பட்டு அனைத்தும் சரிபார்க்கப்பட்டது.
அனைத்துக் கட்சி பிரமுகர்கள், தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் காஞ்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தீயணைப்பு துறை சார்பில் வாகனம் நிறுத்தப்படும் மின் தடை இல்லாமல் இருக்க ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu