மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை: மாகறல் நடுநிலைப்பள்ளியில் அவலம்
மாறகல் நடுநிலைப்பள்ளியில், லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது மாகறல் கிராமம். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், 1 முதல் 8 வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு, வடகிழக்கு பருவமழை பாதிப்புக்கு பின், குடிநீர் கிடைக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய உணவு வேளை, கழிவறை உள்ளிட்டவைகளுக்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதனிடையே, ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவன உரிமையாளர் சங்கர் உள்ளிட்டோருடன் கேட்டதன் பேரில், அவருடைய சிறியரக டேங்கர் லாரி மூலம் தினசரி பள்ளிக்கு குடிநீர் அளித்து வருகிறார். எனினும், ஊராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu