சாலை நீர்நிலைகளில் கொட்டப்படும் கோழிகழிவுகளால் கேள்விக்குறியான சுகாதாரம்‌

சாலை  நீர்நிலைகளில் கொட்டப்படும் கோழிகழிவுகளால்  கேள்விக்குறியான சுகாதாரம்‌
X

காஞ்சிபுரம் அருகே இயங்கும் கோழிப் பண்ணை கழிவுகளை சாலை நீர் நிலைகளில் வீசி வருவதால் சுகாதாரசீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது

காஞ்சிபுரம் அருகே இயங்கும் கோழிப் பண்ணை கழிவுகளை சாலை நீர் நிலைகளில் வீசி வருவதால் சுகாதாரசீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாலாஜாபாத் - வேடல் சாலையில் கீழ்பேரமநல்லூர் அருகே கோழி பண்ணைகள் இயங்கி வருகிறது.

இங்கு வளர்க்கப்படும் கோழிகள் காஞ்சிபுரம் -திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல கோழி லாரிகள் வாரத்துக்கு இருமுறை வந்து செல்கிறது.இந்த லாரி ஓட்டுனர்கள் கோழிப் பண்ணைகளில் இருக்கும் கழிவுகளை உடன் ஏற்றி சென்று இவர்கள் செல்லும் சாலை ஓரங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே வீசி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் கூலிகளை எடுத்துச் செல்ல வந்த லாரிகள் சாலை நடுவிலே கோழிகள் வீசி சென்று அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள ஏரிகள் நீரிலும் வீசி செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுதாகவும், தற்போது காஞ்சிபுரம் சுற்றிலும் விவசாய ஜுரம் பாதிப்பால் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலை இதுபோன்று செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!