உத்திரமேரூர் வங்கியில் போலி அடகு நகைகளுக்கு ஈடாக ₹1.65 கோடி வழங்கி மோசடி

பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வேளாண்மைக்கு கடன் மற்றும் நகை கடன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வங்கியில் நகை கடன் வழங்குவதில் மோசடி நடைபெற்று உள்ளதாக கூறி தொடர் புகார்கள் எழுந்தது. இதனை கூட்டுறவு சங்க அதிகாரிகள் தணிக்கை செய்ததில், போலி நகைகளை ஈடாக பெற்று ரூபாய் ஒரு கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
வங்கிப் பணியாளர்களான செயலாளர் எம் கலைச்செல்வி , மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வங்கி தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ,வங்கி நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றிய விஜயகுமார் மற்றும் வங்கியின் 38 நகை கடன்கள் பெற்ற 25 நபர்களும் இவ்வழக்கில் பொறுப்பாக்கப் பட்டுள்ளனர். சங்கப் பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, நிதி இழப்பு தொகையை வசூலிக்க 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 167 சம்பந்தப்பட்ட பணியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 1.65 கோடி நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu