வழிப்பறி, வாகன கடத்தல் : 3 பேர் கைது

வழிப்பறி, வாகன கடத்தல் : 3 பேர்  கைது
X
உத்தரமேரூரில் வழிப்பறி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. நேற்று முன்தினம் இரவு, டாடா ஏஸ் வாகனத்தில் லாரி டயர்களை மாங்கால் கூட்ரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இறக்கிவிட்டு நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார்.

பெருநகர் செய்யாற்று பாலம் அருகே சென்றபோது நின்று கொண்டிருந்த காரில் இருந்த 3பேர் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜியை தாக்கியுள்ளனர். அவரிடமிருந்த 200 ரூபாயை பறித்தனர். பின்னர் அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தை கடத்தினர். அவர்கள் வந்த காருடன் தப்பிச்சென்றனர். இதுகுறித்து பாலாஜி பெருநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை செய்து, டிரைவரை தாக்கி டாடா ஏஸ் வாகனத்தை கடத்திச் சென்றதாக, பெருநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), புருஷோத்தமன் (19) கார்த்திக் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தையும், திருடர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!