/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு 13க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில்  தடுப்பூசி செலுத்தும் பணி
X

காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தது.அதை தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வரும் தடுப்பூசிகளை கொண்டு அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கடந்த 10 தினங்களாக தடுப்பூசி தட்டுபாடு காரணமாக மருத்துவ முகாம்கள் நடைபெறாமல் அரசு மருத்துவமனையில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நாள்தோறும் 200 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் பத்து தினங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதார நலப் பணிகள் சார்பில் 13க்கு மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் பங்கேற்று தடுப்பூசி செலுத்துகின்றனர் இன்று மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செல்ல செலுத்திக் கொள்ளும் வகையில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 13 Aug 2021 9:00 AM GMT

Related News