ஆற்று நீர் கிராமங்களுக்குள் புகுந்து விடுவதை தடுக்க சுவர் அமைக்க கோரிக்கை

கடம்பர்கோயில் பின்புறம் அமைந்துள்ள செய்யாற்று பகுதியில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளில் ஏற்பட்டு பாலம் துண்டிக்கப்பட்டு தொடர்ச்சியாக இரு மாதங்களாக நீர் சென்று கொண்டிருந்தது.
பெருநகர் செய்யாற்று பகுதியிலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக மாகரல் காவாந்தண்டலம் கிராமங்களைத் தாண்டி திருமுக்கூடல் பகுதியில் பாலாற்றில் கிடைக்கிறது.பல ஆண்டுகள் முன் அனுமன் தண்டலம் பகுதியில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மூலம் நீர் சேமிக்கப்பட்டு நீர் வேகத்தை கட்டுப்படுத்தி அனுப்பியிருந்தது.
கடந்து சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதனை அடுத்து உள்ள கரையோர கிராமங்கள் கருவேப்பம்பூண்டி மடம், கடம்பர்கோயில், ஆதவபாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் முற்றிலும் அழித்து மடம் பகுதியில் கிராமங்களில் நீர் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தியது.ஆகவே வருங்காலங்களில் ஆற்றுநீர் கிராமங்களில் உட்புகுவதை தடுக்க கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று கடம்பர் கோயில்திருப்பணி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளகு வந்த உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து திருக்கோயில் பின்புறம் செய்யாறு நீர் செல்லும் பகுதியினை பார்வையிட்ட அவர் உரிய ஆலோசனை செய்து நல்ல ஒரு தீர்வு காணப்படும் என பொது மக்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu