செய்யாற்று பாலத்தின் நீர்பாதை கழிவுகளை அகற்ற வேண்டும் :பொதுமக்கள் கோரிக்கை

செய்யாற்று பாலத்தின் நீர்பாதை கழிவுகளை அகற்ற வேண்டும் :பொதுமக்கள் கோரிக்கை
X

செய்யாறு பாலத்தின் கீழ் சிக்கியுள்ள கழிவுகள் , இதனால் சேதமடைந்த பகுதியில் நீர் செல்லும் காட்சி

செய்யாறு பாலத்தின் கீழ் நீர்செல்லும் பாதையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என ஒன்றன் பின் ஒன்றாக தாக்கியதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு காணாத மழை பெய்தது.

இதன்காரணமாக பாலாற்றில் 1.60லட்ச கன அடி நீரும் , செய்யாற்றில் 60ஆயிரம் கன அடி நீர் சென்றதால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜாபாத்- இளையனார்வேலூர் சாலை, காஞ்சிபுரம் – உத்திரமேரூர் கீழ் ரோடு தரைப்பாலம் அதிகளவு சேதம் ஏற்பட்டு பொதுப் போக்குவரத்து துண்டிக்கபட்டு இன்று வரை பொதுமக்கள் 40 கிலோமீட்டர் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாகரல் செய்யாற்று பாலத்தில் தற்போதும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையிலும் பாலத்தின் கீழ் செல்லும் நீர் வழிப் பாதையில் கழிவுகள் அடைத்துக் கொண்டதால் சேதமடைந்த பகுதி வழியாக நீர் அதிகமாக செல்வதால் மேலும் சேதமடைகிறது.

நீர் செல்வதைக் பொருட்படுத்தாது பொதுமக்கள் தாண்டித் தாண்டிக் கரைக்கு வந்து பேருந்து பிடித்து காஞ்சிபுரம் , உத்திரமேரூர் செல்லும் நிலைக்கு வந்துள்ளது. இது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

ஆகவே பாலத்தின் அடியில் உள்ள கழிவுகளை அகற்றி நீர் திசை திருப்பி அப்பகுதியில் பாலத்தை சிறிது சிறிதாக சீரமைப்பு பணிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!