400 பழங்குடியினருக்கு நிவாரண உதவி : எம்எல்ஏ சுந்தர் வழங்கல்

400 பழங்குடியினருக்கு  நிவாரண  உதவி : எம்எல்ஏ சுந்தர் வழங்கல்
X

சாலவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு எம்எல்ஏ சுந்தர் நிவாரண உதவிகளை  வழங்கினார்.

சாலவாக்கம் அடுத்த ரெட்டமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 400 பழங்குடியினருக்கு எம்எல்ஏ சுந்தர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல பகுதிகளில் திமுக நிர்வாகிகள் உதவி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழை வீடுகள் சேதம் அடைந்த பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் பழங்குடியின மக்கள். இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த ரெட்டமங்கலம், தோட்டநாவல் ,வாடாவூர், குன்னவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பழங்குடியன மக்களுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிவாரண பொருட்களை வழங்கிய கழக நிர்வாகிகளுக்கு பழங்குடியன மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,மாவட்ட கவுன்சிலர் சிவராமன்,ஒன்றிய கவுன்சிலர் நதியா கோபி ,ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!