காஞ்சிபுரத்தில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ 1 கோடி நிதி, தனியார் நிறுவனம் வழங்கல்
மருத்துவ அலுவலர் அருள்மொழியிடம் மருத்துவ உபகரணங்களை வழங்குகிறார் பாஷ் தொழிற்சாலையின் மேலாளர் அப்துல்வகாப் கட்டாரஹி
காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் செயல்பட்டு வரும் பாஷ் தொழிற்சாலை நிறுவனமும்,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பும் இணைந்து அவளூர்,தென்னேரி கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தும் முயற்சியினை தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ₹1கோடி அளித்து பணிகளை மேற்கொண்டார்கள்.
இவ்விரு சுகாதார நிலையங்களுக்கும் தேவைப்படும் இடங்களில் மேற்கூரை அமைத்தல்,மருத்துவ உபகரணங்களான ஸ்கேன் மிஷன், ஆய்வக உபகரணங்கள், கட்டில், சுத்திகரிப்பு குடிநீர் அமைத்தல், சிசிடிவி அமைத்தல்,ஓய்வறை மற்றும் மருத்துவப்பணிகள் தொய்வின்றி நடப்பதற்கான புனரமைப்பு பணிகளை செய்தல் ஆகியனவற்றை செய்து மாதிரி நிலையங்களாக மாற்றும் பணி நடைபெற்றது.
இன்று அதனை வழங்கும் நிகழ்வுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.பாஷ் தொழிற்சாலையின் தொழில் நுட்பத் தலைவர் ஆனந்த்கினி,சமூக பொறுப்புத் திட்ட மேலாளர் ராஜேஷ்,ராஜசேகரன்,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமேலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார்.முன்னதாக மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலர் அருள்மொழியிடம் பாஷ் தொழிற்சாலையின் மேலாளர் அப்துல் வகாப் கட்டாரகி மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.சுகாதார நிலைய ஆய்வாளர் சவரிமுத்து நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu