ஆர்ப்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக பழங்குடியின ஆர்.செல்வி பொறுப்பேற்பு

ஆர்ப்பாக்கம் கிராம ஊராட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் ஆர்.செல்வி.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 12ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய அலுவலகங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினர் பெண் உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட ஆர் செல்வி என்பவர் வெற்றி பெற்று இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழமலைநாதன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் மற்றும் கையெழுத்திட்டு கிராம ஊராட்சி மன்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் அந்த கிராம ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
இதில் ஆர்ப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரசுராமன் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu