திட்ட பணிகளின் தரம்: ஆய்வு செய்யுங்கள் ஆபிசர்

திட்ட பணிகளின் தரம்: ஆய்வு செய்யுங்கள் ஆபிசர்
X

தரமற்ற நிலையில் அமைக்கப்பட்ட  ஆர்ப்பாக்கம் பாண்டே குளக்கரை உள்வாங்கிய படம்.

காஞ்சிபுரத்தில் திட்ட பணிகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஆர்ப்பாக்கம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2019-2020 கீழ் ஆர்ப்பாக்கம் ,காவாந்தண்டலம் சாலையில் சுமார் ரூ 9.20 லட்சம் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் பாண்டேகுளம் புனரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.

இப்பணிக்கு ஆர்ப்பாக்கம் கிராம ஊராட்சி ஒன்றிய நூறுநாள் பணியாளர்களை பயன்படுத்தி குளக்கரை புனரமைக்கப்பட்டு சுற்று சுவர் பலப்படுத்தப்பட்டது.

இப்பணிகளை தரமாக மேற்கொள்ளாததால் குறைந்த கால அவகாசத்தில் குளக்கரை உருவாகியுள்ளது. பணியின்போது அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பு செய்தும், இதுபோன்று தரக்குறைவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இனிவரும் காலங்களிலும் குறைந்த கால உத்தரவாதத்தை ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து பெற்று பணிகளை கொடுக்க வேண்டும் எனவும் அலுவலர்கள் கொஞ்சமாவது அரசு பணம் வீணாவதை கவனிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!