உத்திரமேரூர் : குறைகள் குறித்த மனுக்களை நாளை அமைச்சரிடம் பொதுமக்கள் வழங்கலாம்

உத்திரமேரூர் : குறைகள் குறித்த மனுக்களை நாளை அமைச்சரிடம் பொதுமக்கள் வழங்கலாம்
X

உத்திரமேரூர் யூனியன் அலுவலகம்

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் தங்கள் குறைகளை அமைச்சரிடம் மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களையும் பொருட்டு ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் முழுமையும் தீர்வு காணப்பட்டுள்ளன.

மேலும், சிறப்பு கணிணி திருத்தம் முகாம் மற்றும் விரைவு நில உடைமை மேம்பாட்டுத் திட்டத் திருத்த அமர்வு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அனைத்து பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் திருநங்கைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைவதற்கு ஏதுவாக பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம்கள் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கீழ்க்கண்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடம் & நேரம் :

17.12.2021 வட்டார வளர்ச்சி அலுவலகம்

உத்திரமேரூர் , பிற்பகல் 03.00 மணி

22.12.2021 வட்டார வளர்ச்சி அலுவலகம் ,வாலாஜாபாத்

பிற்பகல் 03.00 மணி ,

23.12.2021 வட்டார வளர்ச்சி அலுவலகம், காஞ்சிபுரம் .

சிறுகாவேரிபாக்கம் ,பிற்பகல் 03:00 மணி

மேற்படி முகாம்களில் அனைத்து துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவும் , பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேற்படி முகாம்களில் அளித்து பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்கள்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!