காஞ்சிபுரத்தில் 10 இடங்களில் பொது விருந்து நிகழ்ச்சி: எம்எல்ஏ க.சுந்தர் பங்கேற்பு
இளையனார்வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்.
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் இது சிறப்படைய வைக்கும் கையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருள்மிகு குமரக்கோட்டம் திருக்கோயில் காமாட்சி அம்மன் திருக்கோயில் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இளையனர் வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் பொது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வாலாஜாபாத் வட்டம் , இளையனார்வேலூர் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவை வழங்கி தானும் அவர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யப்பிரியா இளமது , ஒன்றிய செயலாளர் குமணன் , ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu