கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் வங்கி நகை மதிப்பீட்டாளர் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட கலெக்டர் அலுவலகம் ( பைல் படம்)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட குறைகள் குடும்ப அட்டை பொதுமக்கள் கிராம வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை மனு அளிப்பது வழக்கம்.
இதில் வாரந்தோறும் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது அதற்கான துறைக்கும் ஆட்சியர் பரிந்துரைப்பதும் வழக்கம்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக காஞ்சிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வங்கியில் போலி நகைகளை வைத்து நகைக்கடன் பல்வேறு பொது மக்களின் பெயரில் பெற்றுள்ளார். இது மற்றொரு நகை மதிப்பீட்டாளரின் ஆய்வில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வங்கி சார்பில் தணிக்கை செய்யப்பட்ட போது பல லட்சம் மதிப்பில் மோசடி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது
மோசடி செய்த பணத்தை திருப்பி செலுத்த வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனைத் தவிர்க்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார்.
வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு காவல் பணியில் இருந்த காஞ்சி தாலுக்கா காவல்துறையினர் அவரைக் காப்பாற்றி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கோபி பணிபுரிந்த கிராமத்தில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை வங்கியில் பல பல போலி பித்தளை நகைகளை வைத்து தங்க நகைக் கடன் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu