ஆடி மாதத்தை முன்னிட்டு எல்லையம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை

ஆடி மாதத்தை முன்னிட்டு எல்லையம்மன் ஆலயத்தில் சிறப்பு  அலங்காரத்துடன் பூஜை
X

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தினையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

ஆர்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம் நடந்தது

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் , ஆர்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன்‌ ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி முதல் நாளிலிருந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து இன்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை வேண்டி அங்கப்பிரவேசம் மேற்கொண்டும், மாவிளக்கு பூஜை செய்தும் அம்மன் அருள் பெற்றனர்.விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்