உத்திரமேரூர் தொகுதியில் 8 வார்டு பொறுப்பாளருக்கு பொங்கல் பரிசு

உத்திரமேரூர் தொகுதியில் 8 வார்டு   பொறுப்பாளருக்கு பொங்கல் பரிசு
X

உத்திரமேரூரில் தி.மு.க. பொறுப்பாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வார்டுகளில் உள்ள திமுக பொறுப்பாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வார்டுகள் அமைந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் தை முதல் நாள் பிறக்க உள்ள நிலையில் தி.மு.க. சார்பில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து அன்று சர்க்கரைப் பொங்கலிட்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தனது தொகுதிக்கு உட்பட்ட 8வார்டுகளில் உள்ள வட்ட பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் என 300 தமிழ் புத்தாண்டு இதை தெரிவித்து வேட்டி சேலை, இனிப்புகள், நாட்காட்டி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் .மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் , நகர அவை தலைவர் சந்துரு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன், ஒன்றிய பொறுப்பாளர் தசரதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், துணை அமைப்பாளர் மலர்மன்னன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare