தேர்தல் விதிகளை மீறி பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சிக் கொடிகள்

தேர்தல் விதிகளை மீறி பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சிக் கொடிகள்
X

விதிகளை மீறி பறந்த அரசியல் கட்சிக் கொடிகள்.

உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஆனைப்பள்ளம் பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நன்னடத்தை விதிகளை பின்பற்ற அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தபட்ட நிலையில் சுவரொட்டிகள் அனைத்தும்‌ அப்புறுபடுத்தும் பணிகள் துவங்கியது.

உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பல இடங்களில் கொடிகம்பம்‌ அகற்றபட்ட நிலையில் புதிய இணைப்பு பகுதிகளான ஆனைப்பள்ளம், சோமநாதபுரம்‌உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கம்பங்களில் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் அளிக்கப்படவில்லை.

தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாக ஊழியர்கள் செயல்படுகிறார்களோ என தோன்றுகிறது.

Tags

Next Story