வருவாய்த்துறை சார்பில் பட்டா பிழை திருத்தல் சிறப்பு முகாம் துவக்கம்
இளையனார்வேலூர் கிராமத்தில் நடைபெற்ற, வருவாய்துறை சிறப்பு முகாமில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் உள்ளிட்டோர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் ஏற்பட்டுள்ள பிழைகளை நீக்கும் சிறப்பு முகாம், வாரந்தோறும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்தார். அவ்வகையில் வாலாஜாபாத் வட்டாட்சியர் பொ.லோகநாதன் முன்னிலையில், மாகரல் பிர்காவிற்கு உட்பட்ட காவாந்தண்டலம் , இளையனார்வேலூர், வள்ளிமேடு மற்றும் சித்தாத்தூர் கிராம மக்களின் விவசாய பட்டாக்கள் திருத்தம், வீட்டு உரிமையாளர்களின் திருத்தம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பட்டாவினை வழங்கினார். வட்டாட்சியர் பொ.லோகநாதன் கூறுகையில், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள மாகறல், தென்னேரி, வாலாஜாபாத் ஆகிய மூன்று குறு வட்டங்களில் உள்ள 71 கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டாகளில் உள்ள எழுத்து பிழைகளை திருத்துதல், பரப்பளவு பிழை, உறவுமுறை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு, அன்றே துணை ஆட்சியர் அளவிலான அதிகாரி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு உடனடியாக திருத்தப்பட்ட பட்டாக்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, திமுக ஒன்றிய செயலாளர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரசுராமன் மற்றும் ஓம்சக்திவரதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu