காஞ்சிபுரம் அருகே தந்தைக்கு சிலை வடித்து அழகு பார்த்த பாசக்கார தனயன்கள்
வீட்டில் தந்தையின் மார்பளவு திருவுருவ சிலை அமைத்துள்ள காட்சி.
விஞ்ஞான வளர்ச்சியில் மயங்கி தனிமையில் வாழ விரும்பிய இக்கால இளைஞர்களால் நாளுக்கு நாள் முதியோர் இல்லங்களில் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வியாபார நிமித்தமாக வந்த எஸ்.கே. அருணாசல பாண்டிய நாடார் என்பவர் அவ்வூரிலேயே தனது மனைவி மகளுடன் வசிக்க துவங்கி உள்ளார்.
இவருக்கு பா.அன்புராஜ், பா. அன்புகண்ணன் என்ற இரு மகன்களும் , பா.செல்வி என்று மகளுடன் கிராமத்திலேயே சிறிய மளிகைக்கடை மற்றும் நிதி சேமிப்பு நிலையம் நடத்தி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகாலமரணம் அடைந்தார். இவரது இறப்பு இவர்களது குடும்பத்தை பெரிதும் பாதித்த நிலையில் அவரது மனைவி தேனம்மாள் அவருடைய நினைவாகவே இருந்துள்ளார்.
தாயாரின் நிலை கண்டு அவரது அவரது இரு மகன்களும் அவரது ஆசையான தந்தையின் சிலை செய்து வீட்டில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலை தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆலோசித்து பின் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மார்பில் கற்களால் உருவாக்கப்பட்ட மார்பளவு சிலையை தந்தையர் தினத்தன்று வீட்டின் நுழைவு வாசல் அருகே அமைத்துள்ளனர்.
மிக நேர்த்தியாக அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த சட்டை அவருடைய பேனா உள்ளிட்ட பொருட்களை சிலைக்கு அழகு சேர்த்து வைத்துள்ளது.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் அனைவரும் அவரைப் பார்த்து விட்டு செல்லுமாறு அமைந்திருப்பதும், வீட்டிற்குள் நுழையும்போது அவரைப் பார்க்காமல் நுழைய முடியாது என்ற வகையில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது.இச் சிலை அமைக்கப்பட்டது அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது மகன் தனது தந்தை மிக கடின வேலைகளில் ஈடுபட்டு எங்களை ஆளாக்கி பிறருக்கு உதவி செய்யும் வகையில் அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் திடீரென அவரது மறைவு எங்களால் ஈடு செய்ய முடியவில்லை எனவும், மூத்த குடிமக்களை வாழும்போது அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய அறிவுரையை கேட்டு வாழ்நாளில் நடக்க வேண்டும் என தாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்வதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu