9 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்: 6 கூடுதல் கிராமங்களும் ஒப்படைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் பணிபுரிந்து வந்த 9 ஊராட்சி செயலர்களை நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆறு ஊராட்சி செயலர்களுக்கு கூடுதலாக 6 கிராம ஊராட்சிகளும், மூன்று ஊராட்சி செயலர்களுக்கு வேறு கிராம நிர்வாக பணிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
களியனூர் கிராம ஊராட்சி செயலராக பணிபுரிந்த கார்த்திகேயன் என்பவர் புரிசை , பரந்தூர் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்தார். அத்திவாக்கம் ஊராட்சி செயலராக பணிபுரிந்த ஜீவரத்தினம் , தென்னேரி கிராம ஊராட்சியை கூடுதலாக கவனிப்பார். கரூர் ஊராட்சி செயலராக பணிபுரிந்த சுரேஷ் , நாய்க்கன்பேட்டை மற்றும் அய்யம்பேட்டை கிராம ஊராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திம்மராஜம்பேட்டையில் பணிபுரிந்த மணிகண்டன் கூடுதலாக களியனூர் கிராம ஊராட்சியையும் கவனிப்பார். அயமிச்சேரி கிராம ஊராட்சி செயலராக பணிபுரிந்த கீர்த்தனா கரூர் மற்றும் ஆட்டுப்புத்தூர் கிராம ஊராட்சிகளில் பணி செய்வார். புரிசை கிராம ஊராட்சி செயலராக பணிபரிந்த ராம்குமார் தண்டலம் கிராம ஊராட்சி செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
திம்மையம்பேட்டை கிராம ஊராட்சி செயலர் ஆக பணிபரிந்த அன்புக்கரசி ஏகனாம்பேட்டை கிராம ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கூடுதலாக திம்மையம்பேட்டையிலும் பணிபுரிவார். ஆட்டுப்புத்தூர் கிராம ஊராட்சி செயலராக பணிபுரிந்த ராஜ்குமார் அயிமிச்சேரி ஊராட்சி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோல் நாய்க்கன்பேட்டை ஊராட்சி செயலராக பணிபுரிந்த பெருமாள் படுநெல்லி கிராம ஊராட்சி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கிராம ஊராட்சிகளில் புதிய ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைக்கும் நிலையில் மீண்டும் பல்வேறு ஊராட்சி செயல்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu