சுடுகாடு பாதைக்கு சொந்த நிலத்தை தானம் அளித்த தம்பதியினர்

சுடுகாடு பாதைக்கு சொந்த நிலத்தை தானம் அளித்த தம்பதியினர்
X
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராம பொதுமக்கள் இடுகாடு பயண்பாட்டிற்காக தனது சொந்த நிலத்தை தம்பதியினர்..கிராம பஞ்சாயத்துக்கு தானமாக வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது களக்காட்டூர் ஊராட்சி. இதன் சார்பு கிராமமான குருவிமலை கிராமத்தில் இடுகாட்டு பாதைக்கும் செல்ல பல ஆண்டுகளாக பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இதற்காக தனது தந்தை வழி சொத்தாக இருந்த 7.5 சென்ட் நிலத்தை கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் கஸ்தூரி தனது கணவர் சரவணனுடன் இணைந்து பொதுமக்கள் செல்வதற்கு தன்னுடைய சொந்த பட்டா நிலத்தை களக்காட்டூர் ஊராட்சி மன்றத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் , கிராம பொதுமக்கள் முன்னிலையில் நிலத்தை காஞ்சிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்கள்

சிறு துளி கூட இடம் கூடபிறருக்கு தர மறுக்கும் இந்நிலையில் பொதுமக்களின் இறுதிப் பயணத்திற்கு செல்லும் பாதைக்கா தன்னுடைய மூன்று லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்து மனிதநேயத்தை மலரச் செய்த தம்பதியருக்கு கிராமமே நன்றி கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!