அவளூர்: போதிய செவிலியர், மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி
டாக்டர், நர்ஸ் பற்றாக்குறையால் நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக, அதனை சுற்றியுள்ள 10மேற்பட்ட மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது. மருத்துவர்கள் இல்லாததால், காய்ச்சல் மற்றும் இதர மருத்துவச் சேவைக்கு வந்த மக்கள் வளாகத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், செவிலியர்கள் இல்லாததால் அவசர மகப்பேறுக்கு வந்தால் கூட, உதவ சிறப்பு செவிலியர்கள் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்கது.
இந்நிலையில் இக்கிராமத்தில் சுகாதாரமற்ற நீர் பருகி வந்ததால் காய்ச்சல் , வாந்தி மற்றும் இதர நோய்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் வரும் நிலையில் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் வாலாஜாபாத் பாலாற்றில் தரைப்பாலத்தில் நீர் செல்வதால் போக்குவரத்து இல்லாமல் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில், அவசர மருத்துவ சேவை கூட கிடைப்பதில்லை. எனவே, உரிய பணியிடங்களை நிரப்பி மருத்துவ சேவை கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu