உத்திரமேரூரில் பணி நேரத்தில் ஓய்வெடுக்கும் நூறுநாள் பணியாளர்கள்

உத்திரமேரூரில் பணி நேரத்தில் ஓய்வெடுக்கும் நூறுநாள் பணியாளர்கள்
X

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நூறு நாள் பணியாளர்கள் பணியை செய்யாமல் ஓய்வு எடுக்கும் காட்சி

உத்திரமேரூர் மானாம்பதி கிராமம் அருகே நுறு நாள் பணியாளர்கள் பணியை செய்யாமல் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.

இது மேலும் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல் , நீர்ப்பாசன கால்வாய் சீர்படுத்தும், குடிநீர் ஆதாரங்களை பெருக்குதல் உள்ளிட்ட கிராம் வளர்ச்சிக்கு அக்கிராமத்திலுள்ள பணியாளர்களை கொண்டு செய்யபடுகிறது.

மேலும் இப்படி முழுக்க முழுக்க கிராம் வளர்ச்சிக்கு என எண்ணாமல் இதில் பணிபுரியும் பணியாளர் பணிகளை காலை பத்து மணிக்கு துவக்கி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்ய வேண்டும் இதை பணித்தள பொறுப்பாளர் ஒருவர் கவனிக்க வேண்டும் அதன்பின் இவருக்கு இன்று வேலை செய்ததற்கான உறுதி செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பணியாளர்கள் செய்யாமல் அலட்சியமாகவே பணியிடங்களில் ஓய்வெடுத்து வருகின்றனர்.இன்று உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதி கிராமம் அருகே நூறு நாள் பணியாளர்கள் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற் கொண்டிருந்தனர்.

அதன் அருகே 500 மீட்டர் தொலைவில் மாவட்ட ஆட்சியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு இருந்தனர். இதை சற்றும் கண்டுகொள்ளாமல் பணியாளர்கள் சாலை ஓரமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்

இதனால் இது போன்ற பணிகளுக்கு ஊதியம் வழங்குவதால் பண விரயம் மட்டுமே ஏற்படுவதாகவும் கிராம வளர்ச்சிக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா