உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்

உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

உத்தரமேரூர் தொகுதியில் மாநகரில், மதூர், திருமுகம் கூடல் பகுதிகளில் அதிகளவில் கல்குவாரி இயங்குகிறது. இதனால் இப்பகுதி மட்டுமில்லாமல் கனரக லாரிகளால் பல பகுதிகளில் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக தெரிய வந்ததால், தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஆலைக்கும் அனுமதி தரமாட்டேன் எனவும், புதிய ஆலையும் அமைக்க மாட்டேன். இதேபோல் வாலாஜாபாத் - உத்திரமேரூரை இணைக்கும் வகையில் இளையனார்வேலூர் - நெய்யாடுபாக்கம் கிராம மக்கள் செய்யாறு கடந்து செல்ல வேண்டியதாய் அதன் குறுக்கே மேம்பாலம் அமைத்து தருவேன் என கிராமங்களில் வாக்குறுதி அளித்து வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Tags

Next Story
ai marketing future