கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்வு

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்வு
X

ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நரிக்குறவர் பெண்

காரணை கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக நரிக்குறவர் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அச் சமுதாயத்தினரின் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடை பெற்ற வாக்குகள் கடந்த 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் உண்டு, சமநிலையில் அடைந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணை கிராமத்தில் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற போட்டியில் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு பயின்ற நரிக்குறவர் பெண் சத்தியாடில்லிராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது சமூகத்தில் முதல் அந்தஸ்தை தங்களுக்குப் பெற்றுத் தந்ததாகவும் இவர் மூலம் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளை பெருகி வாழ்வில் முன்னேறுவோம் என சமூகத்தினர் தெரிவித்து மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!