இளையானார்வேலூர் : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
செய்யாற்றில் வெள்ளம்.
தமிழகத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே 9-ல் இருந்து 12 வரை துவக்கப்பட்ட நிலையில் பள்ளி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது இளையனார் வேலூர் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி கீழ் இளையனார்வேலூர், சித்தாத்தூர் மற்றும் வள்ளிமேடு பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் மற்றும் மேல்நிலை கல்வி கற்க அருகிலுள்ள நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செய்யாற்றை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது செய்யாற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி திறந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி செல்ல இயலாத நிலை உருவாகியுள்ளது.
இதேபோன்று கடந்த காலங்களில் அக்கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அப்பள்ளி தலைமையாசிரியர் எந்தவித அறிவிப்பும் மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது.
18 மாதங்களுக்குப் பிறகு பள்ளி செல்ல உற்சாகம் அடைந்த நிலையில் மாணவர்கள் ஆற்றை கடந்து ஆபத்தான நிலையில் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்காததால் மீண்டும் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
காஞ்சி மாவட்ட கல்வித்துறை உடனடியாக இக் கிராம மாணவர்களுக்கு கிராமத்திலேயே சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu