சாலவாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ சுந்தர்

சாலவாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ சுந்தர்
X

சாலவாக்கம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை எம்எல்ஏ சுந்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சாலவாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , சாலவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சீரானமுறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தினிடையே பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் புகார் மனுவை அப்பகுதி மக்கள் அளித்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று புதியதாக ஊராட்சி நிதியிலிருந்து புதியதாக 60,000 லிட்டர் கொள்ளளவு உடைய புதிய மேல்நிலைநீர்தேக்கதொட்டி கட்டப்பட்டது.

இதனை இன்று உத்திரமேரூர் சட்டமன்றஉறுப்பினரும், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் K.முத்துக்குமார், R.வேல்முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் K.பாஸ்கரன் , சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!