சாலவாக்கம் : மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்ரமணியன்

சாலவாக்கம் : மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்ரமணியன்
X

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த சாலவாக்கம் பள்ளி.

காஞ்சிபுரம் மாவட்டம் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்வது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் , செவிலியர்கள் , DPC பணியாளர்கள் , ஊராட்சி மன்ற செயலர்கள் என பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கி அமைச்சர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சாலவாக்கத்தில் க்கு வருகை தந்த அவருக்கு கிராம ஊராட்சி மன்றம் சார்பில் பேருந்து நிலையத்திலிருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பின் போது நீதிமன்றம் நேற்று தடை செய்த சரவெடிகள் வெடித்து எல்லை மீறி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செயல்பட்டனர். இதேபோல் நிகழ்ச்சி நடைபெற்ற பள்ளி அருகேயும் இதே செயலை தொடர்ந்தனர்.

இது போன்ற செயலில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு காவல்துறை இதைக் கண்டு காணாமல் இருந்தது வருந்தத்தக்க விஷயமாகவே காணப்பட்டது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future