திமுக அமைதியான ஆன்மீக புரட்சி நடத்தி வருகிறது: அமைச்சர் சேகர்பாபு
தாழயாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்ற போது எடுத்த படம்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாரணாசி அடுத்த தாழயாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. ராமநாதபுரம் பரமசிவ சிவாச்சாரியார் தலைமையிலும், ஆலய அர்ச்சகர் ஹரிகரன் குருக்கள் முன்னிலையிலும் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
அபிஷேகத்தை தொடர்ந்து திருக்கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான பிரசன்ன வெங்கடாஜலபதி, விநாயகர், பாலமுருகன், நவகிரகங்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட அனுக்கிரக பாபா கோயில் கோபுரங்களூக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
விழாவில் உத்தரமேரூர் எம்எல்ஏ க. சுந்தர் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எம்.பி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் பணி ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் தாழையம்பட்டு கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவிற்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் திமுக அமைதியான ஆன்மீக புரட்சி நடத்தி வருகிறது வரும் காலங்களில் பட்டின பிரவேச நிகழ்வுகளுக்கு மாற்றாக ஏற்பாடுகளை செய்ய ஆதினங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் சூழல் உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu