எம்ஜிஆர் பிறந்தாள்: வீடு தோறும் தென்னை மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, முத்தியால்பேட்டை பகுதியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் இனிப்பு,தென்னங்கன்று வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து, அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின், ஏழை எளிய மக்கள் 300 நபர்களுக்கு, காலை இனிப்புடன் கூடிய சிற்றுண்டி விருந்து அளித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் இரு இலவச தென்னை மரக்கன்றுகளை வழங்கினார். இவ்விழாவின் அப்பகுதி பொதுமக்கள், எம்ஜிஆர் விசுவாசிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu